2022 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது.நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பில் அமைச்சர்கள் மத்தியில் கருத்து முரண்பாடு நிலவிவருகின்றது. நாட வேண்டுமென ஒரு தரப்பும், நாடக்கூடாதென மற்றுமொரு தரப்பும் வலியுறுத்திவருகின்றன.
எனவே, இது தொடர்பில் கலந்துரையாடி முடிவொன்றை எடுப்பதற்காக மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
எனினும், இன்று முக்கியத்துவமிக்க பத்திரங்கள் இருப்பதால் அடுத்த கூட்டத்துக்கே இவர்கள் அழைக்கப்படுவார்கள் என தெரியவருகின்றது.2022 ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
#SrilankaNews