இன்றைய தினம் முல்லைத்தீவு பகுதியில் முதலாவது எரிவாயு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.
இன்று காலை புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள வீடொன்றிலேயே இவ் எரிவாயு அடுப்பு வெடித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சமையலில் ஈடுபடும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. அச்சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் யாரும் இல்லாததால் உயிர் ஆபத்துக்கள் ஏதும் இடம்பெறவில்லை.
இவ்வெடிப்பு சம்பவம் அங்குள்ள மக்களை பெரும் அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
#SriLankaNews