கப்பம் கோரிய போலி சி.ஐ.டி சிக்கினார்!!!

image b83aef3033

திருட்டு விசாரணை ஒன்றினை சமாளிப்பதற்கு கப்பம் கோரிய போலி சி.ஐ.டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றத்தடுப்பு பிரிவினர்  காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி உப்போடை புறநகர் பகுதி ஒன்றில் நகை திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை விசாரணை மேற்கொள்வதற்காக சந்தேக நபரின் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளனர்.

பின்னர் சந்தேக நபர் வீட்டில் இல்லாமையினால் மீண்டும் வருவதாக கூறி அவ்விடத்தில் இருந்து சென்றுள்ள நிலையில் அதே வீட்டிற்கு சில நிமிடத்திற்கு மற்றுமொரு போலி சி.ஐ.டி என கூறப்படும் நபர் ஒருவர் சென்றுள்ளார்.

குறித்த பிரச்சினையை தீர்த்து தருவதாகவும் ரூபா 10 ஆயிரம் கப்பமாக தரவேண்டும் என சந்தேக நபரின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொடர்பில் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கமைய காத்தான்குடி பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையிலான பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

#SrilankaNews

Exit mobile version