நாட்டில் புதிய அரசமைப்பில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வே முன்வைக்கப்பட வேண்டும். இதன் மூலமே நாட்டின் பொருளாதாரமும் மேம்படும் – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசுடன் பேச்சு நடத்த நாம் எப்போதும் தயார். கடந்த காலங்களில்கூட அரசாங்கத்துடன் 13 சுற்று பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தேர்வு காண அரசுடன் இணைந்து செயற்படுமாறு ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்த நிலையில், அதற்கு பதிலளிக்கும்போதே சிறிதரன் எம்.பி மேற்படி தெரிவித்துள்ளார்.
#SriLankaNews

