WhatsApp Image 2022 03 05 at 10.23.40 AM
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு பாதாளத்துக்குள் விழவில்லை – அது ஏற்கனவே விழுந்து விட்டது -சுமந்திரன்!!

Share

நாட்டை வளப்படுத்துவோம், பாதுகாப்போம் எனக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே நாட்டை அதளபாதாளத்துக்குள் தள்ளியுள்ளனர்.

எனவே, இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ, சுமந்திரன் அறைகூவல் விடுத்துள்ளார்.

நாட்டில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, நீண்டநேர மின்வெட்டு, பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் ஹட்டனில் இன்று (06) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மேலும் கூறியவை வருமாறு,

” இந்த எதிர்ப்பு போராட்டத்திலும், பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக நடைபெறும் கையெழுத்து போராட்டத்திலும் பங்கேற்பதற்காகவே நாம் மலையகம் வந்துள்ளோம்.

நாட்டில் ஒருவரும் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. எந்த பொருளை வாங்கச்சென்றாலும் ‘இல்லை’ என்ற பதிலே வழங்கப்படுகின்றது.

அப்படியே பொருட்கள் இருந்தாலும் அவற்றின் விலை அதிகம். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள்கூட எகிறியுள்ளன. நாட்டிலே பிரயாணம் செய்ய முடியவில்லை. வீட்டிலே சமைக்க முடியவில்லை.

நாட்டை வளப்படுத்துவோம், பாதுகாப்போம் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இரு வருடங்களுக்குள்ளேயே நாட்டை அதளபாதாளத்துக்குள் தள்ளிவிட்டனர்.

நாட்டு மக்களும் விழுந்துள்ளனர். இப்படியான ஆட்சியாளர்கள் தொடர்ந்தம் இருக்கக்கூடாது. மக்கள் கிளர்ந்தழெ வேண்டும்.

மக்களை ஒடுக்குவதற்கு ஆட்சியாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவார்கள். அதனால்தான் இப்படியான பயங்கர சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்துகின்றோம்.” – என்றார் சுமந்திரன்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...