உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!!

WhatsApp Image 2021 08 27 at 22.18.40

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!!

பூநகரி, சங்குப்பிட்டிக் கடலில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்ட நிலையில், பூநகரி மற்றும் சாவகச்சேரி பொலிஸாரும், கடற்படையினரும் அந்தப் பகுதிக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த சடலம் மீன்பிடி வலைகள் சுற்றிய நிலையில் காணப்படுகின்றது. உயிரிழந்து 3 கிழமைகள் வரை ஆகியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

சடலத்தை மீட்டு எடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version