நாட்டில் மேலும் ஐந்து புதிய விமான நிறுவனங்கள் இலங்கையுடன் விமான சேவையை ஆரம்பிக்க உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இந்த வருட இறுதிக்குள் புதிய விமான நிறுவனங்களின் சேவைகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சகம் சர்வதேச அளவில் நடத்திய கலந்துரையாடலின் விளைவாக புதிய விமான நிறுவனங்கள் இலங்கையுடன் விமான சேவைகளை தொடங்கவுள்ளன.
அதன்படி, சுவீடனின் Edelweiss நவம்பர் 1 முதல் வாரத்திற்கு ஒரு விமானத்தையும், ரஷ்யாவின் Aeroflot வாரத்திற்கு இரண்டு முறையும் சேவையில் ஈடுபடும்.
மேலும் டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து ரஷ்யாவின் Air Azure வாரத்திற்கு இரண்டு முறையும், இத்தாலியின் Nyos Air வாரத்திற்கு இரண்டு முறையும் சேவையில் ஈடுபடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment