தற்போதைய அரசின் அமைச்சரவை தோல்வியடைந்துள்ளது எனவும் அனுபவம்மிக்கவர்கள்
அமைச்சரவைக்கு உள்வாங்கப்பட்டு புதிய வேலைத்திட்டத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் எமக்கு தேவை தலைவர்கள் அல்ல, வேலைத்திட்டங்களே அவசியமாக உள்ளன. மக்களை தியாகம் செய்யுமாறு கூறிவிட்டு,ஆட்சியாளர்கள் சுகம் அனுபவித்தால் அதனை அனுமதிக்க முடியாது.
தற்போதைய அமைச்சரவை தோல்வி கண்டுள்ளது. அமைச்சரவை தோல்வியெனில் முழு நாடும் தோல்விதான்.எனவே, துறைசார் அனுபவம் உள்ளவர்களை அந்தந்த அமைச்சு பதவிக்கு நியமிக்குமாறு வலியுறுத்துகின்றேன்.தற்போதைய அமைச்சரவை தோல்வியடைந்த காரணத்தினால் ஒட்டுமொத்த நாடும் வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
#SriLankaNews
Leave a comment