ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசின் அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் முக்கியத்துவமிக்க சில விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளன.
குறிப்பாக ஊழியர் சேமலாப நிதியம் உட்பட விசேட நிதியங்களில் இருந்து 25 வீத வரியை அறவிடும் நிதி அமைச்சர் தீர்மானத்துக்கு அமைச்சர்கள் சிலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.
Leave a comment