ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளிலுள்ள அனைத்து கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது என அறியமுடிகின்றது.
பேராயரின் விசேட பணிப்புரையின் பிரகாரமே இதற்கான ஏற்பாடு இடம்பெறுவதாகவும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை இச்சந்திப்பு இடம்பெறக்கூடும் எனவும் தெரியவருகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், நீதி பொறிமுறை உட்பட முக்கியமான சில விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
#SriLankaNews