விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் அட்டைப்படம் பொறிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் அடையாள அட்டையை வைத்திருந்த நபரை சிங்கப்பூர் அரசாங்கம் அவருடைய நாட்டுக்கே திருப்பி அனுப்பியுள்ளது.
செல்வமணி என்ற குறித்த நபர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எடையூர் சிவராமன் நகரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 அரை வருடங்களாக சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றி வரும் இவர் அண்மையில் மாவீரர் நாளை கொண்டாடியதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த நபர் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினரின் புகைப்படம் வைத்திருந்ததாக கூறி 6 நாட்களுக்கு மேலாக விசாரணைகள் நடாத்தி அவரை சொந்த ஊருக்கே திருப்பி அனுப்பியுள்ளனர்.
வாழ்நாள் முழுவதும் சிங்கப்பூருக்குள் நுழைய முடியாத வகையில் அவருக்கு தடை விதித்துள்ளது சிங்கப்பூர் அரசாங்கம்.
#IndiaNews
Leave a comment