நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” – என்று ஆளும் மற்றும் எதிரணி அரசியல் பிரமுகர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் மூத்த அமைச்சரான சமல் ராஜபக்ச.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம்வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
” நாம் கூட்டணி அரசு. பல கட்சிகள் உள்ளன. அவற்றின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வேண்டும். அதேபோல எதிரணியினரின் யோசனைகளையும் ஏற்க வேண்டும்.
தேசிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் உறுதியான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். ஆட்சி மாறினாலும் அந்த கொள்கை மாறக்கூடாது.
எனவே, மக்களை தூண்டாமல், அரசியலுக்கு அப்பால் நாட்டை மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.”- என்றார் சமல் ராஜபக்ச.
#SrilankaNews
Leave a comment