மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

8556906 vijay

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam – TVK) தலைவர் விஜய் இன்று (நவம்27) மாவீரர் தினத்தை முன்னிட்டு நினைவுகூர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது உத்தியோகபூர்வமான ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவினை இட்டுள்ளார். குறித்த பதிவில், “தீரத்துடன் களமாடிய மாவீரர்களை வணங்குவோம், தியாக தீபங்களின் நினைவைப் போற்றுவோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில், தமிழர் தாயகங்களிலும் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் பெருந்திரளான மக்களுடன் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version