mali
செய்திகள்உலகம்

பேருந்திற்குத் தீ வைத்த பயங்கரவாதிகள்-33 பேர் உடல் கருகிச் சாவு

Share

மாலியில் பேருந்தொன்று தீ வைத்து எரிக்கப்பட்டதில், 33 பேர் உடல் கருகிச் சாவடைந்துள்ளனர் .

பயங்கரவாதிகளால் குறித்த பேருந்துக்குத் தீ வைத்து எரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவ இடத்திலேயே 33 பேரும் உடல் கருகி சாவடைந்துள்ளனர்.

மாலியின் சாங்கோ ஹெரி என்ற பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது சென்று கொண்டிருந்த பேருந்தை மறித்த பயங்கரவாதிகள் சிலர், பேருந்தின் சாரதியைக் கொலை செய்துவிட்டு, பேருந்தின் கதவுகளை மூடி அதற்குத் தீ வைத்துள்ளனர்.

இதன்போது தப்பியோட முயற்சித்தவர்கள், பேருந்தின் கதவுகளைப் பயங்கரவாதிகள் மூடியதால், அங்கிருந்து தப்பித்துக்கொள்ள முடியாமல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

குறித்த பேருந்தில் 40 பேர் பயணித்திருந்த நிலையில், 7 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்தபொழுதிலும், அங்கிருந்து பயங்கரவாதிகள் தப்பியோடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 22
செய்திகள்உலகம்

ஈரான் விவகாரத்தில் டிரம்பின் தற்காலிகப் போர்நிறுத்தத்தின் பின்னணி!

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைபிடிக்கும் அணுகுமுறையை அரசியல்...

world 21
செய்திகள்உலகம்

மறைந்த தனது மனைவிக்காக நிலவில் பெயர் சூட்டிய விண்வெளி வீரர்!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணித்துள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ விண்கலக் குழுவினர்,...

world 20
செய்திகள்உலகம்

இரு வார காலப் போர்நிறுத்தம்: ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தெஹ்ரான் சம்மதம்!

ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த...

Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...