பயங்கரவாத தடைச்சட்டம்! – யாழில் இன்றும் கையெழுத்து வேட்டை

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளில் இலங்கை தமிரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய கையெழுத்து போராட்டத்தில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எஸ்.சுகிர்தன், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசன், வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் த.நடனேந்திரன், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG 20220225 WA0013

#SriLankaNews

Exit mobile version