சடுதியாக உயர்ந்த கொரோனா!

COVID cases

COVID

இந்தியாவில் சடுதியாக கொரோனா அதிகரித்துள்ளது.

இந்தியாவில் சடுதியாக ஒரேநாளில் 7 ஆயிரத்து 579 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.

மேலும் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ள நிலையில் 3 கோடியே 39 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் சிகிச்சையில் குணமடைந்துள்ளார்கள்.

அத்தோடு 1 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.

மேலும் சடுதியாக ஒரேநாளில் 236 பேர் சாவடைந்துள்ளனர்.

இதனையடுத்து சாவடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 65 ஆயிரத்தைக்தண்டியுள்ளதாக இந்தியாவின் சுகாதார துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் மீண்டும் நாட்டிடை முடக்க வேண்டய நிலை ஏற்படலாமென வைத்திய நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

அத்தோடு மக்களை மிகவும் பாதுகாப்பாகவும் இறுக்கமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றும்படியும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

#india

Exit mobile version