வங்காள தேசத்தில் இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறமை அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் 20 இந்துக்கள் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
தலைநகரம் டாக்காவில் இருந்து 255 கி.மீட்டர் தூரத்தில் பிர் காஞ்ச் உபசிலா என்ற கிராமம் உள்ளது.
அது ஒரு இந்துக்கள் வாழும் மீனவக்கிரமமாகும். அவ் இந்துக்கள் இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக பேஸ்புக் மூலமாக தகவல் பரவியது.
இதையடுத்து அயல் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அந்த கிராமத்துக்குள் புகுந்து வீடுகளுக்கு தீ வைத்தார்கள் .
இதில் 20 வீடுகள் எரிந்து சாம்பல் ஆகின. மேலும் 66 வீடுகளை தாக்கி சேதப்படுத்தினார்கள்.
அங்குள்ள இந்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து கிராம மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு தப்பி ஓடினார்கள்.
இது பற்றிய தகவல் கிடைத்ததை அடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
இந்த கலவரம் அடக்குவதற்க்கு பொலிஸார் குவிக்கப்படடார்கள் .
அத்தோடு 52 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வங்காள தேசத்தில் தொடர்ந்தும் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘மத நம்பிக்கைகளுக்கு மதிப்பு அளித்து வங்காள தேசம் செயல்பட வேண்டும்.
அவர்கள் விழாக்கள் நடத்துவதற்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.
#world
Leave a comment