மன்னார் பகுதியில் கரையொதுங்கிய மர்மப் பொதியால் பதற்றம்!

மன்னார் – சௌத்பார் இராணுவ முகாமிற்கு பின் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் மர்மப் பொதியொன்றால் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

இன்று (20) காலை  செளத்பார் முகாமிற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் மர்மப் பொதியொன்று கரை ஒதுங்கிய உள்ளது.

குறித்த மர்மப்பொதி தொடர்பாக மன்னார் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்த நிலையில், உடனடியாக அப்பகுதிக்கு பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் வருகைதந்தனர்.

WhatsApp Image 2021 11 20 at 13.40.14 2

மர்மப்பொதியை சோதனைச் செய்த பொலிஸார் அப் பொதியில் எவ்விதமான ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருட்கள் இல்லையென உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும், மன்னார் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த மர்மப்பொதி  பல்வேறு மின் சுற்றுக்களுடன் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


#SriLankaNews

Exit mobile version