கல்முனை , பாண்டிருப்பு பகுதியில் கடற்கொந்தளிப்பால் பதற்றம்!!

இன்று (07) அதிகாலை திடீரென கல்முனை மற்றும் பாண்டிருப்பு பிரதேசங்களில்  கடற் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடற்கரை வீதியையும் தாண்டி குடியிருப்புப் பகுதிக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் பல வீடு, வளவுகளும் வெள்ளத்தில் மூழ்கி, பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

கடல் நீர் புகுந்தமையால், பிரதேச மக்கள் அச்சமும் கலவரமும் அடைந்த நிலையில், அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

கல்முனை மாநகர சபையின் கனரக இயந்திரங்கள் மூலம் அப்பகுதிகளில் தேங்கியுள்ள கடல் நீரை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

#SriLankaNews

Exit mobile version