image d612aa9798
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரூ. 50,000 இலஞ்சம் கோரிய தொழில்நுட்ப உத்தியோகத்தர் வத்தளையில் கைது!

Share

வத்தளை பிரதேச சபையின் வெலிசர உப அலுவலகத்தில் கடமையாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர், 50,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளர் ஒருவர் தனது கட்டட வரைபடத்திற்கு (Building Plan) அனுமதி பெறுவதற்காகச் சமர்ப்பித்திருந்தார். அதில் உள்ள குறைபாடுகளைப் புறக்கணித்து, வரைபடத்திற்கு அனுமதி பெற்றுக்கொடுப்பதாகக் கூறி குறித்த உத்தியோகத்தர் 50,000 ரூபாயை இலஞ்சமாகக் கோரியுள்ளார்.

இது தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, நேற்று (07) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கையும் மெய்யுமாகப் பிடிபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அரச அலுவலகங்களில் இடம்பெறும் ஊழல்கள் மற்றும் இலஞ்ச விவகாரங்கள் குறித்துப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், இவ்வாறான சம்பவங்கள் குறித்து உடனடியாக முறையிடுமாறும் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...