அதிகரிக்கிறது தேநீர் மற்றும் உணவுப்பொதிகளின் விலை!

cup of tea 1024x758 1

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் தற்போது உணவுப்பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பகலுணவு பொதியொன்றின் விலையை 20 ரூபாவினாலும், ஒரு கோப்பை தேநீரின் விலையை 5 ரூபாவினாலும் அதிகரிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

நாளை (23) முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகும் என அச்சங்கமானது தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version