ஊழியர் சேமலாப நிதியம் உட்பட சேவை நிதியங்களுக்கு 25 வரி விதிப்புக்கு கடும் எதிர்ப்பை வெளியிடுவதற்காக அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படாது எனவும், அமைச்சரவையில் ஆட்சேபனை தெரிவிக்கப்படும் எனவும் அக்கட்சி அறிவித்துள்ளது.
அதேவேளை, அரசின் மேற்படி திட்டத்துக்கு தொழிற்சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன.
தொழில் அமைச்சராக பதவி வகிக்கும் நிமல் சிறிபாலடி சில்வாகூட எதிர்ப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews