தமிழ்க்கட்சிகளின் வரைபில் தமிழீழம் – கண்டுபிடித்தார் குணவர்த்தன!!

Dinesh Gunawardena

இந்திய பிரதமருக்கான ஆவணத்தை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் மட்டும் கையொப்பமிட்டு அனுப்புமாக இருந்தால் அது விடுதலை புலிகளின் கனவான தமிழீழத்திற்கான வரைபாகவே இருக்குமென கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆரூடம் வெளியிட்டுள்ளார்.

நேற்று இரவு நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ் பேசுகின்ற கட்சிகளுக்கு இடையில் – பொதுவான இணக்கப்பாடு , ஒற்றுமை இல்லை. இந்திய பிரதமருக்கு என தயார் செய்யப்பட்ட பொது ஆவண விடயம் இதனை வெளிக்காட்டுகின்றது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் இங்குள்ளவர்களுக்கு ஒருபோதும் அரசியல் தீர்வினை வழங்க முன்வராது.

எமது நாட்டின் உள் பிரச்சினைகளில் தலையிடுவதற்கு எந்தவொரு வெளிநாடுகளுக்கும் அனுமதி இல்லை. நாட்டின் அரசுதான் இங்குள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும் என்பதை தமிழ்த்தலைமைகள் விளங்க வேண்டும்.

தமிழ், முஸ்லிம், மலையக மக்களது அனைத்து பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும் நடவடிக்கையில் எமது அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால், தமிழ்பேசும் கட்சி தலைவர்கள் எம்மை நாடாமல் சர்வதேசத்தினை நாடுவதுதான் விசித்திரமாக உள்ளது.என்றார்.

இந்நிலையில் இந்தியாவிற்கு அனுப்புவதெற்கென தயார் செய்யப்பட்ட வரைபில் வடக்கு கிழக்கு தமிழ்க்கட்சிகளின் தலைமைகளே கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

 

 

Exit mobile version