சீனா தங்களுக்கு எதிராக அறிவாற்றல் போர் என்ற புதிய உத்தியைக் கையாண்டு வருவதாக தைவான் நாட்டின் உயர்மட்ட உளவு அமைப்பு எச்சரித்துள்ளது.
சீனா நூற்றுக்கணக்கான போலி செய்தி இணையதளங்களையும் மற்றும் தானியங்கி கணினி மென்பொருள்களான பாட் (Bot) நெட்வொர்க்குகளையும் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவை தைவான் அரசுக்கு எதிராகத் தவறான தகவல்களைப் பரப்பப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், குறித்த போரானது தைவானுக்கு எதிராக நேரடியாக ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்படும் போர் அல்லாமல் மாறாக மக்களின் சிந்தனை, உணர்ச்சிகள் மற்றும் மனநிலையைக் குறிவைத்து நடத்தப்படும் போர் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தைவானின் தேசிய பாதுகாப்பு பணியகம் கருத்து வெளியிட்டுள்ளது.
இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2024-2025 காலகட்டத்தில் சீனாவிடமிருந்து வரும் இத்தகைய தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன.
குறிப்பாக, முகப்புத்தகம், டிக்டாக் மற்றும் எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலம் விஷமத்தனமான கருத்துகள் பரப்பப்படுகின்றன.
கூர்மையான ஆயுதத்தால் காவல்துறையை தாக்க வந்தவர் சுட்டுக்கொலைபோலியாக காணொளி
AI மற்றும் டீப்ஃபேக் போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசியல் தலைவர்கள் பேசாத விஷயங்களைப் பேசியது போல போலியாக காணொளிகளை உருவாக்கிப் பரப்புகின்றனர்.
மக்களின் விருப்பங்கள் மற்றும் செயல்பாடுகளை ஆராய்ந்து அவர்களுக்கு ஏற்றவாறு மனமாற்றத்தை ஏற்படுத்தும் தகவல்களை ஆட்டோ மேட்டிக்காக அனுப்புகின்றனர்.
இந்த தாக்குதல்களை எதிர்கொள்ள தைவான் அரசு முழு அரசாங்க அணுகுமுறை என்ற திட்டத்தைச் செயல்படுத்துகின்றது.
உடனுக்குடன் போலிச் செய்திகளைக் கண்டறிந்து அவற்றைத் தெளிவுபடுத்துவதுடன் பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.