ராகமவில் கைவிடப்பட்ட நிலையில் T-56 துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்பு!

1678941867 1678934490 Gun L

ராகம, பஹலவத்த பகுதியில் பாழடைந்த நிலையில் காணப்பட்ட மோட்டார் வாகனம் ஒன்றிலிருந்து T-56 ரகத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

ராகம பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று (23) இரவு பஹலவத்த பகுதியில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அங்கு நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருந்த மோட்டார் வாகனம் ஒன்று சோதனையிடப்பட்டது.

அந்த வாகனத்திற்குள் இருந்து ஒரு T-56 ரகத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் நிரப்பப்பட்ட இரண்டு மெகசின்கள் (Magazines) கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குற்றச் செயல் ஒன்றைத் திட்டமிட்டோ அல்லது பொலிஸ் சோதனையிலிருந்து தப்பிக்கும் நோக்கோடோ சந்தேகநபர்கள் இந்தத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் வாகனத்தை அங்கேயே கைவிட்டுச் சென்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள ராகம பொலிஸார், வாகனத்தின் உரிமையாளர் மற்றும் தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

Exit mobile version