வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் மற்றும் கொக்குவில் உள்ள வீடுகளில் புகுந்தே குறித்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைதானவர் மானிப்பாய் புதுமடத்தைச் சேர்ந்த கொலின் (வயது-26) என்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபரிடமிருந்து கூரிய ஆயுதம் ஒன்றும் கைப்பட்டப்பட்டுள்ளது. கைதான நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மானிப்பாய் மற்றும் கொக்குவில் பகுதிகளில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் கடந்த நவம்பர் 23ஆம் திகதி புகுந்த கும்பல் ஒன்று வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட நிலையில் அங்கிருந்து தப்பித்தது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைதான நபருக்கு எதிராக ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews