யாழ்ப்பாணம்- கொக்குவில் கேணியடிப் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு நடந்த இச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொக்குவில் கேணியடிப் பகுதியினைச் சேர்ந்த உதயகுமார் ரதீபன் என்னும் இளைஞரே காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத மூன்று பேரால் குறித்த இளைஞர் தாக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.
#SrilankaNews
Leave a comment