யாழ்ப்பாணம் மாதகல் குசுமந்துறை பகுதியில் கடற்படையினரால் பதற்றசூழல் ஏற்பட்டுள்ளது.
மாதகல் குசுமந்துறை கிராம சேவையாளர் பிரிவு – 150, பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியாருக்கு சொந்தமான 1 பரப்பு காணியை சுவீகரிப்பதற்கான காணி அளவீட்டு பணிகள் இன்றைய தினம் காலை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் கடற்படையினர் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த காணியை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அரசியல்வாதிகள், அப்பகுதி மக்கள் என பலரும் குறித்த காணிக்கு முன்பாக கூடியுள்ளனர்.
கொட்டான்களுடன் கடற்படையினர் அவர்களை சூழ்ந்து கொண்டு, அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
#SriLankaNews