சடலமாக மீட்கப்பட்டவரின் மரணத்தில் சந்தேகம் – ஊரவர்கள் ஆர்ப்பாட்டம்!!

1639129594 protest 02

டயகம மேற்கு தோட்டம் 5ம் பிரிவில் கடந்த 06 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட சாமிநாதன் தங்கேஸ்வரி (53)  மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சுமார் 100 பேரளவில் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி கறுப்பு கொடி பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸார் சரியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பிரேத பரிசோதனையின் பின்னர் இறந்தவரின் உடலை பார்க்கவிடாமல் நல்லடக்கம் செய்ய பொலிஸார் அனுமதி வழங்கியதாகவும்,

ஆற்றில் மிதந்த சடலம் உடையின்றி கிடந்தமையால் இதில் சந்தேகம் நிலவுவதாக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

#SrilankaNews

Exit mobile version