1990535 20
செய்திகள்இலங்கை

தாயின் ஓரினச்சேர்க்கை நடத்தையால் சந்தேகம் – 6 மாதக் குழந்தை கொலையா? மறுபிரேதப் பரிசோதனைக்கு உத்தரவு!

Share

ஓசூர் பகுதியில் ஆறு மாதக் குழந்தை ஒன்று தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத் திணறி இறந்ததாக முன்னர் தகவல் வெளியான நிலையில், குழந்தையின் தாயின் ஓரினச்சேர்க்கை நடத்தை காரணமாகக் குழந்தையின் தந்தை சந்தேகம் எழுப்பியதால், தற்போது காவல்துறையினர் குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக, ஆறு மாத ஆண் குழந்தை ஒன்று தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத் திணறி இறந்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.

குழந்தையின் தந்தைக்கு அவரது மனைவியின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழுந்தது.

மனைவியின் தொலைபேசியைச் சோதனை செய்தபோது, அதில் தவறான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் இருந்ததைக் கணவர் கண்டறிந்துள்ளார். மேலும், அவரது மனைவி ஓரினச்சேர்க்கையில் தவறாக நடந்துள்ளதும் தெரியவந்தது.

இதனை அடுத்து, குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் குழந்தையின் தந்தை காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், குழந்தையின் உடலை நாளை (நவம்பர் 9) தோண்டி எடுத்து மறு பிரேதப் பரிசோதனை செய்து விசாரணை நடத்தக் காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...