உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, நாளை பதிலளிக்கவுள்ளார்.
இந்த தகவலை அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் நாளை நான் தெளிவுபடுத்தவுள்ளேன் என்று அவர் சபையில் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment