நீர்கொழும்பு பகுதியில் ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையம் என்ற பெயரில் நடத்திச் செல்லப்பட்ட விபசார விடுதியொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுவ பகுதியிலேயே இவ்வாறு இடம்பெற்றுள்ளது.
நேற்று(29) மாலை நீர்கொழும்பு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் விடுதியில் 30, 31 மற்றும் 37 வயதுடைய முகாமையாளர் மற்றும் இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
#SriLankaNews