கடவுச்சீட்டுகளுக்கான நீண்ட வரிசைகளில் இளைஞர்கள் நிற்கின்றதை காணமுடிகின்றது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்று (21) இடம்பெற்ற .“சமகி விஹிதும்” படையணி ஆரம்ப நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், எதிர்க்கட்சியினரின் ஒரேயொரு போராட்டமே, அரசாங்கத்தின் உரம் தொடர்பான தீர்மானத்தில் முன்வைத்த காலை பின்வைக்க வைத்துள்ளது.
நாட்டை நேசிக்கும் இளம் தலைமுறையினர் எதைப்பற்றியும் சிந்திக்க முடியாமல் ஆதரவற்ற நிலையில் இருக்கின்றனர்.
இந்நாட்டில் வாழவிரும்பாத இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியே தயாராக இருக்கின்றனர்.
அரசியலை விடுத்து நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சேவையாற்ற வேண்டும்.
நாட்டுக்கு நன்மதிப்பை கொண்டு வருவதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews