2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த தமது கட்சி எம்.பிக்கள் மூவரிடம் விளக்கம் கோருவதற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
அத்துடன், கட்சியில் அவர்கள் வகிக்கும் அனைத்து பதவிகளில் இருந்தும் அவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
வரவு- செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எடுத்திருந்தது. எனினும், கட்சி தீர்மானத்தையும்மீறி 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது அதற்கு ஆதரவாக எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹ்மட் ஆகியோர் வாக்களித்தனர்.
இந்நிலையிலேயே இம் மூவரும் தற்போது நீக்கப்பட்டுள்ளனர்.
மு.கா. தலைவர் எதிராக வாக்களித்தார். தௌபீக் எம்.பி. வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
#SriLankaNews