சுப்பர் லீக் கால்பந்தாட்டம் திங்கள் கிழமை மீண்டும் ஆரம்பமாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்று, தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் போட்டி கொரோனா அதிகரித்ததன் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு சுப்பர் லீக்கின் 3ஆம் கட்டத்தில் நிறைவுசெய்யப்படாமல் இருக்கும் அப்கன்ட்றி லயன்ஸ் அணிக்கும் டிபெண்டர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி ஆரம்பமாகவுள்ளது.
தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இப்போட்டிகளில் பங்குபற்றுவேர் சுகாதார நடைமுறைகள் கடுமையாக பின்பற்ற வேண்டுமென போட்டி நடத்துனர்கள் தெரிவித்துள்ளார்கள்.
#sports
Leave a comment