Sumanthiran 1
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

சுமந்திரனுக்கு செருப்பு மாலை அணிவித்து கொடும்பாவியும் எரிப்பு!

Share

எதிர்பைத் தெரிவிக்கும் முகமாக சுமந்திரனுக்கு செருப்பு மாலை அணிவித்து கொடும்பாவியும் எரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை குருநகர் உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏசுமந்திரனுக்கு எதிராக இன்றைய தினம் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, குருநகர் பகுதியில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் குறித்த போராட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.

அத்துடன் போராட்டத்தின் முடிவில் சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு பழைய செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, எரிக்கப்பட்டது.

Sumanthiran1

சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு பழைய செருப்பு மற்றும் கல்லு, கழிவிப்பொருட்களால் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது.

Sumanthiran2

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளூர் இழுவை மடிதொழில் தடை செய்யப்பட வேண்டும் என அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே குருநகர் வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...