உணவகங்களில் திடீர் பரிசோதனை!

image 8ee0ac2005

உணவுகளின் தரங்கள் தொடர்பாக உணவகங்களில் விசேட ஆய்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் மூலம் பொருட்கள், உற்பத்தி போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுவதோடு, உணவுகளின் தரங்களும் பரிசோதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பொதுமக்கள் பண்டிகைக் காலங்களில் கொள்வனவு செய்யும் உணவு பொருட்களில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு உபுல் ரோஹன கேட்டுக் கொண்டுள்ளார்.

 

#SriLankaNews

Exit mobile version