காணாமலாக்கப்பட்டோரை கண்டறிய அறிக்கைகள் போதாது!!!

706x410q70maureen war sri lanka subbedm

காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தில் இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் போதுமானவை அல்ல. என காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் அறிவித்துள்ளது.

காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு தமிழில் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் 20 ஆவணங்களை சமர்ப்பித்தாலே காணாமலாக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்கமுடியும் என காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்களுக்கான நீதியை கோரி ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் செய்தவண்ணமே உள்ளனர்.

காணாமலாக்கப்பட்டவர்கள் இப்போது உயிருடன் இல்லை என அவர்களது குடும்பத்தினரை ஏற்கச்செய்யும் மரணச்சான்றிதழ்களை அவர்களின் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என அரசாங்கம் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்றது.

இந்நிலையில்  20 ஆவணங்களை அளித்தால் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் கோரியுள்ளது.

குறித்த அலுவலகம் காணாமல்போனவர்கள் தொடர்பில் அலுவலகத்திற்கான விண்ணப்பம், காணாமல் போனவரின் தேசிய அடையாள அட்டை வாகனச்சாரதி அனுமதிப்பத்திரம்- காணாமல்போனவரின் அடையாள அட்டை இலக்கம்,பிறப்பு அத்தாட்சி பத்திரம், உட்பட 20 ஆவணங்களை கோரியுள்ளது.

#SriLankaNews

 

Exit mobile version