பதுளை , ஹாலி எல, உடுவரை தோட்டத்து மாணவியை கோடரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்த நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவியை கொலை செய்துவிட்டு 32 வயதான சந்தேக நபர் தலைமறைவானார். இதனையடுத்து அவரை கண்டுபிடிப்பதற்காக விசேட குழுக்களை அமைத்து பொலிஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்நிலையிலேயே ஹாலிஎல உடுவர பிரதேசத்தில் மறைந்திருந்தபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் காதலை ஏற்க மறுத்ததாலேயே மாணவி கொலை செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
#SriLankaNews