மலையகத்திலும் மாணவர்களின் வருகை வீழ்ச்சி!

Students

200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் இன்று (21.10.2021) முதல் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்தாலும், பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை இடம்பெறவில்லை. மாணவர்களின் வருகையும் குறைவாகவே காணப்பட்டது.

மலையக பகுதிகளில் சுமார் 20 வீதமான பாடசாலைகளே திறக்கப்பட்டிருந்தன. மாணவர்களின் வருகையில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது.

ஒக்டோபர் 25 ஆம் திகதியில் இருந்தே அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளித்திருப்பார்கள் என அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்திருந்தது. 21 மற்றும் 22 ஆம் திகதிகளிலும் பணி புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி அதிபர், ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் இன்று பாடசாலைக்கு வரவில்லை. வருகை தந்த சில மாணவர்களும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மன்னார் மாவட்டத்திலும், மாணவர் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்ப நிலை காணப்படுவதால் இன்றைய தினம் வியாழக்கிழமை (21) பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் வருகை மிகவும் குறைவாக காணப்படுகின்றது.

#SrilankaNews

Exit mobile version