அதிஉயர் சபையாகக் கருதப்படுகின்ற பாராளுமன்றத்திலேயே எதிரணி எம்.பிக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
சபாநாயகர் பக்கச்சார்பற்ற வகையில் செயற்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவரின் பொறுப்பாகும்.ஆனால் எமக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதனால் சபை அமர்வை புறக்கணித்துள்ளோம். எமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
#SriLankaNews