வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் யாழில் போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் “வலிந்து காணாமல்போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், காணாமல்போனோருக்கான இழப்பீடு வேண்டாம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா” போன்ற பல கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பொலிஸாரும் புலனாய்வுப்பிரிவினரும் போராட்டம் நடைபெற்ற பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

வலிந்து காணாமல் போனோரின் உறவுகளால் ஒவ்வொரு மாதமும் 30ஆம் திகதி போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

20211130 095702

#SriLankaNews

Exit mobile version