வவுனியாவில் நேற்று மாலை மழை மற்றும் கடும் காற்று வீசியதன் காரணமாக வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடத்தொகுதியின் கூரைப் பகுதி தூக்கி வீசப்பட்டது.
இதன்போது, மேலும் சில கூரைத் தகடுகள் தரையில் விழும் நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் தொடர்பில் வவுனியா வர்த்தக சங்கத்தினர் உடனடியாக நகரசபையினருக்கு தகவல் வழங்கினர்.
சனிக்கிழமை விடுமுறை தினத்திலும் ஓய்வில் நின்ற ஊழியர்கள் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு விரைந்து செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கழன்று விழும் நிலையில் காணப்பட்ட கூரைத் தகடுகள் நகரசபையினரால் அகற்றம் செய்யப்பட்டது.
Leave a comment