மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது பணிப் பகிஷ்கரிப்பு!

153224 strike

சுகாதார தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

சம்பள முரண்பாடு, பதவி உயர்வு உட்பட 09 கோரிக்கைகளை முன்வைத்து 17 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பணிப்
புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கும், சுகாதார அமைப்புகளின் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (08) இடம்பெற்றது. எனினும், பேச்சு தோல்வியில் முடிடைந்தது.

இதனையடுத்தே உரிய தீர்வு கிட்டும்வரை போராட்டத்தை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார தரப்பின் தொழிற்சங்க நடவடிக்கையில் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநோயாளர் பகுதிக்கு சிகிச்சைபெற வருபவர்கள் திரும்பி செல்லும் நிலை காணப்படுகின்றது.

#SriLankaNews

Exit mobile version