அதியுயர் சபையில் பெண்களை அவமதித்தால் கடும் நடவடிக்கை – எச்சரிக்கிறார் சபாநாயகர்!

speaker mahinda yapa abeywardena 700x375 1

அதியுயர் சபையில் பெண்களை அவமதிக்கும் வகையில் செயற்பட்டால் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுங்கட்சி எம்.பி திஸ்ஸ குட்டியாராச்சியை சபாநாயகர் கடுமையாக எச்சரித்தார்.

பாராளுமன்றத்தின் இன்றைய (23) அமர்வை ஆரம்பித்து வைத்தபோதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இவ்வாறு  தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, பாராளுமன்றத்தில் இல்லாத மற்றொரு பெண் ஆகியோரை, ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி அதியுயர்சபையில் அவமதிக்கும் வகையில் பேசியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சபாநாயகர் என்ற வகையில் நான் ஆழமாக ஆராய்ந்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

திஸ்ஸகுட்டியாராச்சி எம்.பியின் உரை தொடர்பில் நான் கவலையடைகிறேன். அதியுயர் சபையில் பெண்களை அவமதிக்கும் வகையில் செயற்பட வேண்டாம்.

பெண்களை அவமதிக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்திலும் தொடர்ந்து இடம்பெற்றால், நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் அந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பேன் எனவும் எச்சரித்தார்.

#SriLankaNews

Exit mobile version