அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் இலாபத்தில் 173% அதிரடி வளர்ச்சி: அரசாங்கத்திற்கு ரூ. 1.1 பில்லியன் வருவாய்!

screenshot 1767373582725 665x430 1

இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் (SPC), 2025ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு வரி வருமானமாக 1.118 பில்லியன் ரூபாவை வழங்கிப் பாரிய நிதி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 173 சதவீத வளர்ச்சியாகும்.

கூட்டுத்தாபனத்தின் சொந்த வருவாய் 26 சதவீதத்தாலும், நாடு தழுவிய ‘ஓசுசல’ (Osu Sala) மருந்தக வலையமைப்பின் வருமானம் 9 சதவீதத்தாலும் உயர்ந்துள்ளது.

கூட்டுத்தாபன வரலாற்றில் முதல்முறையாக, சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவிற்கான (DHS) அனைத்து நிதி ஒதுக்கீடுகளையும் பயன்படுத்தி, மருந்து இறக்குமதிக்கான ‘இன்டெண்ட்’ (Indent) கட்டளைகள் 100% முழுமையாக வழங்கப்பட்டுள்ளன.

கிரிபத்கொட, நாரஹேன்பிட்டிய, கேகாலை, கல்முனை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் ஐந்து புதிய ஓசுசல கிளைகள் திறக்கப்பட்டமை. வினைத்திறனான மேலாண்மை காரணமாக, நஷ்டத்தில் இயங்கி வந்த பல கிளைகள் தற்போது இலாபமீட்டும் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன, வருமான அதிகரிப்புக்கான காரணங்கள்:

மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்த ISO 17025 ஆய்வக அங்கீகாரச் செயல்முறையை SPC ஆரம்பித்துள்ளது. சந்தைக்கு விநியோகிக்கப்படும் அனைத்து மருந்துகளும் நான்கு கட்டக் கடுமையான தரப்பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதைச் சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது.

முறையான மருந்துப் பயன்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு தழுவிய சுகாதார முகாம்கள் மற்றும் விழிப்புணர்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

 

 

Exit mobile version