தேங்கிக் கிடக்கும் கொள்கலன்கள்! – பொருட்களுக்கு செயற்கைத் தட்டுப்பாடு

terminal colombo port 2020

default

இரண்டு மாதங்களாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த விடயம் தொட்ரர்ப்பில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.இருப்பினும் எவ்விதமான தீர்வுகளும் காணப்படவில்லை.

துறைமுகத்தில் அத்தியாவசிய பொருட்கள் தேங்கிக்கிடக்கும் காரணத்தினாலேயே, பொருட்களுக்கு செயற்கைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த பிரசின்ஸ்க்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில் தொடர்ச்சியாக இந்தநிலை ஏற்படும் என்றும் அச் சங்கம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version