05 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிவனொளிபாத மலை யாத்திரையில் போதைப்பொருள்: 6 இளைஞர்கள் கைது!

Share

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த 25 முதல் 33 வயதுக்கு இடைப்பட்ட ஆறு இளைஞர்கள், ஞாயிற்றுக்கிழமை (01) பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நல்லத்தண்ணி நகரில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் மொறட்டுவை, மாத்தறை, பாயாகலை, வங்கதெனிய, ஹக்மனை மற்றும் மீகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து கஞ்சா, ஐஸ் (Ice), போதை மாத்திரைகள் மற்றும் சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. புனித தலங்களுக்கு யாத்திரை என்ற பெயரில் போதைப்பொருட்களைக் கொண்டு வந்து விற்பனை செய்ய அல்லது பயன்படுத்த முயற்சி செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

சந்தேகநபர்களை ஹட்டன் பதில் நீதவான் முன்னிலையில் திங்கட்கிழமை (02) முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிவனொளிபாத மலை பருவகாலத்தில் ஏற்படும் குற்றச்செயல்களைக் குறைக்க பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்ரீகர்களில் சந்தேகத்திற்கு இடமானவர்களை நல்லத்தண்ணி பொலிஸார் தொடர்ந்து தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். யாத்திரை தலத்தின் புனிதத்தைக் காக்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை தொடரும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எழும் கண்டனம் – தமிழர்தாயகம்.

 

 

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...