இராணுவ சீருடைக்கு சமமான துணியில் தைக்கப்பட்ட ஆடை அணிந்து இலங்கை பெண் ஒருவர் வெளியிட்டிருந்த டிக்டொக் காணொளியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது,
இலங்கை பாதுகாப்பு பிரிவினரின் சீருடைகளை சிவில் மக்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான சீருடைகளை அணியவோ அல்லது நிர்மாணிக்கவோ விசேட அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டும் ,
பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் உரிமம் பெற்ற ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே இலங்கை ஆயுதப்படையினருக்கான ஆடைகளை உற்பத்தி செய்யமுடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண் சர்ச்சைக்குரிய காணொளி வெளியிட்டமை குறித்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்டம் உள்ளதெனவும், சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் இவ்வாறான டிக் டொக் காணொளிகள் தொடர்பில் ஆராயப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#srilankanews
Leave a comment