A350 900 Srilankan e1644812057237
செய்திகள்இலங்கை

இலங்கை விமானிகளும் வேலை நிறுத்தத்தில் – அரசுக்கு செக் வைத்த எயார்லைன்ஸ்!!

Share

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானிகள் மன்றம் ‘நேரத்துக்கு மட்டும் வேலை’ தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வை வழங்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிர்வாகம் தவறிவிட்டதாகவும் அதனால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிட்டதாகவும் மன்றத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதற்கமைய, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள விமானக் கடமைகளை அவர்களின் விமான அட்டவணைக்கு அமைய மட்டுமே செய்வார்கள் .

மேலும், அங்கிகரிக்கப்பட்ட வருடாந்த விடுமுறை மற்றும் பொது விடுமுறை நாட்களில் விமானிகள் கடமைகளைச் செய்யமாட்டார்கள் .

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களை ஒழுங்காக இயக்குவதற்கு போதுமான விமானிகளை நியமிக்கவில்லை என்றும் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...